தொடுத்த வினாக்கள்:
சாணார் காசு என்பது பற்றி சொல்லுங்கள்?
ஈழக் காசு பற்றி சொல்லுங்கள்?
காசு வெளியிடும் அதிகாரம் அறிஞர்களுக்கா அல்லது ஆட்சியாளர்களுக்கா?
உதாரணப் பாடலில், தாயின் கடமை, தந்தையின் கடமை, கொல்லரின் கடமை, வேந்தரின் கடமை எல்லாம் சொல்லப்பட்டுள்ளன. அதே பாடலில் அந்தத் தாய் - தந்தையின் மகன் 'காளை' எனக் குறிப்பிடப் படுகிறான்.
அந்தக் காளையின் கடமை அறிஞர்கள் மத்தியில் அறிஞர் என நிரூபிப்பதா? அல்லது, போரில் களிரை எய்து மீள்வதா?
மற்றோர் பாடலில்: சேரனுக்கும் சோழனுக்கும் நிகழ்ந்த போரில், களத்தில் நின்று பரணர் பாடுகிறார்: குதிரைகள் வீரர்களுடன் மாய்ந்தன, யானைகளும் மாய்ந்தன. தேரில் வந்து போரிட்ட சான்றோரும் மொத்தமாக மாண்டனர். 'அறிஞர்'கள்' ஏன் போர்க்களத்தில் தேரில் வந்து மாய்ந்திட வேண்டும்?
'வாளின் வாழ்நர்' என சங்க இலக்கியங்கள் குறிப்பது யாரை?
நிழலும் பணியும் என்ற கல்வெட்டுக் குறிப்பில் 'நிழல்' எனக் குறிப்பது யாரை?
முதலி என்பதும், தேவர் என்பதும் பட்டமா அல்லது சாதியா?
களப்பிரர் காலத்தில் இருந்தே குழப்படிகள் தொடங்கி விட்டன என்பதை நான் நீதி நூல்களில் இருந்தே தெளிவு படுத்திய பின்னரும், பிற்காலப் பாடல்களை எடுத்துப் போட்டு தாங்களே சரி என வாதிடுவது எத்தகையது?
இடையில், சந்தில் சிந்துபாய்வது போல 'வாய்மொழி இல்லக்கியங்கள் எல்லாம் அவர் அவர் விருப்பத்துக்கு பாடிக்கொண்டனர்' என்று ஒரு குரல். சரி, ஒரு வாதத்திற்காக அப்படியே வைத்துக் கொள்வோம்.
நாங்களே உயர்ந்த சாதி என சொல்லப்படும் பிராமணர் என எவரும் விருப்பத்திற்கு எழுதிக் கொள்ளாதது ஏன்?
நாங்களே சூரிய சந்திர குலம் என வன்னியர்களோ அல்லது முத்திரையரோ அல்லது மறவர்களோ எழுதிக் கொள்ளாதது ஏன்?
நாங்களே செட்டிகள் என வெள்ளாளர்கள் சொல்லிக்கொள்ளாதது ஏன்?
ஏன் ஒருவருமே தற்செயலாகக் கூட மாற்றி சொல்லிக்கொள்ளவில்லை?
கல்வெட்டுகளில் சில அரசர்கள் இருமரபும் தூய மரபு என தாய் வழியிலும், தந்தை வழியிலும் க்ஷத்ரிய மரபினர் எனக் குறிப்பிட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் சில அரசர்கள் குறித்து, "பிறங்கடை மரபினன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏன் இப்படி? அவர் விருப்பத்திற்குக் குறிப்பிடுவதாயின் 'பிறங்கடை மரபு' என்பதற்குப் பதில் மேற்கூறியது போலவே 'இரு மரபும் தூய மரபு' என்று குறிப்பிட்டுக்கொள்ளாதது ஏன்?
வேளாட்டிகள் / வெள்ளாட்டிகள் என்று இலக்கியம், கல்வெட்டு என ஏராளமான குறிப்புகள் உண்டு. இதன் பொருள் என்ன?
தமிழகத்தில் தேவதாசி முறை இருந்து பின்னர் ஒழிக்கப்பட்டது. அந்த தேவதாசியரின் சாதிப் பெயர் என்ன?
புடைப் பெண்டிர் யார்? அதற்கும் வெள்ளாட்டிகளுக்கும் தொடர்பு என்ன?
'வெள்ளாள அடிமைகள்' என்கிற பல கல்வெட்டுக் குறிப்புகள் இருக்கின்றன. இதன் பொருள் என்ன?
'வாயில்' என்றால் என்ன? வேளாண் வாயிலுக்கு எந்த இடம்? என்ன கடமை?
பார்ப்பாரில் கூட வாயில் உண்டு. அதே நேரத்தில், பார்ப்பார் / அறிவர் இருவரும் யாருக்கும் ஆலோசனை கூறலாம். 'பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி யார்க்கும் உரையார் யாப்பொடு புணர்ந்தே' - தொல்
"நாஅல்வேத நெறிதிரியினும் திரியாச் சுற்றமொடு ..." (புறம் 2;வரிகள் 18 - 19)
"நான்மறை முனிவ ரேந்துகை ..." (புறம் 6;வரி 20)
"நற்பனுவ நால்வேதத்
தருஞ்சீர்த்தி ..." (புறம் 15;வரிகள் 17 - 18)
"நான்மறை முதல்வர் சுற்றமாக" (புறம் 26; வரி 13)
"அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்" (புறம் 93; வரி 7)
இந்த நான்மறை, நால் வேதம் என்பன எவை?
பார்ப்பார் என்பவர் மிக உயர்வாகச் சொல்லப்படுகிறார்களே, அவர்கள் யார்?
"ஆர்புனை தெரியனின் முன்னோ ரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர்.." (புறம் 43; வரி 13 - 14)
பார்ப்பார் எந்தத் திணைக்கு உரியவர்?
"தண்ணடை நல்கல் வேந்தர்க்குக் கடனே..."
யாருக்கு நல்க வேண்டும்? சான்றோனுக்கு இல்லையா?
புறநானூற்றுப் பாடல்களில் தண்ணடை போர்வீரர்களுக்கு அளிக்கப்பட்டதாக இருக்கிறதா?
அல்லது அறிவிற் றெளிந்த அறிஞர்களுக்கு அளிக்கப்பட்டதாக இருக்கிறதா?
எத்தனை அறிவிற் தெளிந்தோருக்கு தண்ணடை கொடுக்கப்பட்டிருக்கிறது?
பதிற்றுப் பத்து, பாடல் 82 வரி:13
"கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர்"
தானைச் சான்றோர் என்பதன் பொருள் என்ன?
பழைய உரை: "கொல்லக் கொல்லக் குறைபடாத (குறையாத) தானையென்று அதன் பெருமை கூறியவாறு."
போர்வீரர்க்கு ஆதவாக உரையாசிரியரின் கற்பனைக் குதிரை ஓடுகிறதா?
அல்லது கவிஞனின் கற்பனைக் குதிரையே போர்வீரர்க்கு ஆதரவாக ஓடிவிட்டதா?
பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும்
உ. வே. சா பதிப்பு, உ. வே. சா நூல் நிலையம், சென்னை- 90
முதற்பதிப்பு 1904 எட்டாம் பதிப்பு 1994, பக்கம் 218